சிம்புவின் அடுத்தப்பட்டதில் இணைந்த பிரபல நடிகர்! அப்போ படம் கண்டிப்பாக தாறுமாறு!

சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார் சிம்பு. படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. படம் வெளியாவதற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார் சிம்பு. படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.
இந்நிலையில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கவுள்ளார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிம்புவுடன் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் ஜெய். ஜெய் ஏற்கனவே சிம்புவின் வாலு, இது நம்ம ஆளு படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இதற்குமுன்னர் சிம்புவம், ஜெய் இருவரும் இணைந்து வேட்டை மன்னன் என்ற படத்தில் நடிக்க இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.