நடிகர் கவுண்டமணியா இது? தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.



actor-gowndamani-current-photos

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் என்றால் அனைவர்க்கும் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகர் கவுண்டமணிதான். இன்றைய நகைச்சுவை நடிகர்கள் படத்தின் ஹீரோவை கலாய்க்க தயங்கும் வேளையில் ஹீரோ உட்பட யாரையும் விட்டுவைக்காமல் சகட்டுமேனிக்கு கலாய்ப்பதில் இவருக்கு நிகர் இவரே.

இதுவரை பலநூறு பாடங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகர் கவுண்டமணி. இவரது நகைச்சுவைகள் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளன. புது நடிகர்களின் வருகை, வயதான தோற்றம் இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளார் நடிகர் கவுண்டமணி.

இவர் தற்போது என்ன செய்கிறார்? எப்படி உள்ளார் என எதுவும் தகவல்கள் இல்லாத நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான சிக்ஸர் படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். 

Kavundamani

இந்நிலையில் 80 வயதாகும் நடிகர் கவுண்டமணி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் மிகவும் வயதான தோற்றத்தில் நடப்பதற்கே சிரமப்படுவதுபோல் உள்ளார் நடிகர் கவுண்டமி.

என்னதான் வயதாகி இருந்தாலும் அன்று எப்படி இருந்த மனுஷன், இன்று இப்படி ஆகிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Kavundamani