அடேங்கப்பா இவ்வளவா...தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அடேங்கப்பா இவ்வளவா...தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.?


Actor dhanush salary details for the gray man movie

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் ஹாலிவுட் சினிமாவில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் போன்ற படங்களை இயக்கிய  ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தி கிரே மேன் படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட் பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The gray man

இந்நிலையில் தற்போது தி கிரே மேன் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்காக தனுஷ் $ 500,000 சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.