அடஅட.. தம்பியை தொடர்ந்து அண்ணன்! தமிழக முதல்வரை நேரிலேயே சந்தித்த மெகா ஸ்டார்!! தீயாய் பரவும் புகைப்படம்!!

அடஅட.. தம்பியை தொடர்ந்து அண்ணன்! தமிழக முதல்வரை நேரிலேயே சந்தித்த மெகா ஸ்டார்!! தீயாய் பரவும் புகைப்படம்!!


actor-chiranjeevi-meet-tamilnadu-cheif-minister

கடந்த சில மாதங்களுக்கு முன்பு  நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலினை திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவ்வபோது மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்து அவர் ஆட்சி செய்வதை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக, மெகா ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவி தற்போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் நேற்று நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டி பதிவு வெளியிட்டிருந்தார்.

Chiranjeevi

அதில் அவர், அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்  என தெரிவித்துள்ளார்.