அச்சோ.. பிரண்ட்ஸ், வானத்தைபோல பட நடிகரின் தற்போதைய நிலை..! ரோட்டில் ஐஸ்கிரீம் விற்கும் பரத் ஜெயந்த்..!!
கடந்த 2001ம் ஆண்டு நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, மதன் பாபு, ரமேஷ் கண்ணா, ராதா ரவி உட்பட பலர் நடித்து பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரண்ட்ஸ்.
இந்த படத்தில் விஜயின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவர் பரத் ஜெயந்த். இவர் பல திரைப்படங்களில் நடிகர்களின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாரிசு தொடரில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அவர் இளவயது வந்ததும் திரைத்துறையில் இருந்து மாயமான நிலையில், வாலிபராக இருக்கும் பரத் ஜெயந்த் பெசன்ட் நகரில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் சமீபத்தில் பல தொலைக்காட்சிகள் பேட்டி எடுத்தன.
அவர் தனது வாழ்க்கை குறித்து பேசுகையில், "பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்தேன். அன்று மக்கள் என்னை சூழ்ந்தார்கள், கையெழுத்து வாங்கினார்கள். சிறுவயதிலேயே பல புகழ்களை பார்த்துவிட்டேன். அப்போதே, ஐஸ்கிரீம் கடை வைத்து ஐஸ்கிரீம்களை சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஆனால், பின்னாளில் அதுவே என் தொழிலாகிப்போனது. இப்போதும் என்னை அடையாளம் காண்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். திரையில் மீண்டும் நடிக்கலாம் என்ற ஆசை என்னிடம் இருக்கிறது என்றாலும், தொழில் நான் இல்லாத போதிலும் நடிக்கலாம் என்ற நிலை வரும்போது எதிர்காலத்தில் நடிப்பேன்" என கூறினார்.