தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பிய பிரபல டாப் நடிகர்! வைரலாகும் வீடியோ! விளாசும் நெட்டிசன்கள்!!

தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பிய பிரபல டாப் நடிகர்! வைரலாகும் வீடியோ! விளாசும் நெட்டிசன்கள்!!


actor-balakrishna-beat-child-to-take-photo-video-viral

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், மூத்த கலைஞராகவும் வலம் வருபவர் நந்தமுரி பாலக்கிருஷ்ணா. இவர் ஏராளமான படங்களில் ஹெலிகாப்டரை கயிற்றால் கட்டி இழுப்பது, ஏரோபிளேனில் சென்று குதிரையை சேஸ் செய்வது என யாராலும் நம்ப முடியாத பல சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இவரது படக் காட்சிகள் பலவும் நெட்டிசன்களின்  ட்ரோல்க்கும் உள்ளாகியுள்ளது.

மேலும் பாலகிருஷ்ணா படங்களுக்கு என்றே டோலிவுட்டில் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் 61 வயது நிறைந்த பாலகிருஷ்ணா நடிப்பில் அண்மையில் வெளிவந்த அகண்டா திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது.

இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களுடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது, அருகில் தனது தந்தையின் தோளில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அவர் தட்டியெழுப்பி போஸ் கொடுக்க கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக இப்படியா குழந்தையை அடித்து எழுப்புவது என விளாசி வருகின்றனர்.