சினிமா

விஷால் அம்மாவுக்காக அக்ஷய்குமார் செய்த காரியம்! இனியாவது கேட்பாரா விஷால்?

Summary:

Actor akshaikumar advice to actor vishal

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 2.0. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்த நிலையில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

சென்னை சத்தியம் திரை அரங்கில் மிக பிரமாண்டமாய் நேற்று  2.0. படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. சரியாக 12 மணிக்கு டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் ட்ரைலர் சற்று தாமதமாகி 12.30கு வெளியானது.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாகா எமி ஜாக்சனும், ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் படம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில் யக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பிரபலங்கள் பலர் வீடியோ கால் மூலம் பேசினர். அப்போது வீடியோ கால் மூலம் பேசிய விஷால் அக்‌ஷய் குமாரிடம் நீங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன என கேட்டார். இதற்கு பதிலளித்த அக்‌ஷய் அயராது உடற்பயிற்சி செய்வதே காரணம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்  விஷாலின் அம்மா விஷால் அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டிங்கிறான் என கூறி வருத்தப்பட்டதாக கூறினார். ஆகவே அம்மாவுக்காக அரிசி சம்பந்தப்பட்ட உணவை எடுத்துக் கொள்ளுங்கள் என அக்‌ஷய்குமார் விஷாலுக்கு அறிவுரை வழங்கினார்.


Advertisement