ஹாலிவுட்டில் நடிக்கவிருக்கும் விஜய் மற்றும் சமந்தா.. வெளியான புகைபடத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் கோலிவுட் திரையுலகில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆரம்பம் தனது தந்தையின் மூலம் சினிமாவில் நுழைந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் விஜய்.

இதைப் போன்று நடிகை சமந்தாவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது மயோசைடிஸ் எனும் நோய் பாதிப்பினால் தமிழ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது வெளிநாட்டிற்கு சென்று நோய்க்கான சிகிச்சைபெற்று வருகிறார்.
இதுபோன்ற நிலையில், ஏ ஐ தொழில்நுட்பம் சமீப காலமாக பிரபலமான ஒன்றாக மக்கள் மத்தியில் உலாவி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல ஆச்சரியப்படும் விதமான செயல்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் தமன்னாவின் காவாலா பாடலுக்கு பல நடிகைகள் ஆடுவது போன்று வடிவமைத்திருந்தது AI.

தற்போது விஜய், சமந்தா, கமல் போன்ற முக்கிய பிரபலங்கள் ஹாலிவுட் நடிகர்கள் போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது ஏ ஐ. இந்த தொழில்நுட்பம் மக்களுக்கு பிடித்தமானதாக இருந்தாலும் இதில் பாதகமும் இருக்கின்றது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறி வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.