கஜினி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா.? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண பிரபல நடிகர்..

கஜினி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா.? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண பிரபல நடிகர்..



Acter madhavan openup in interview

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்த தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்து இருக்கிறார்.

surya

தற்போது நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது திரைப்படத்தை நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்பு வெற்றிமாறனுடன் இணைந்து திரைப்படம் நடிக்கவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியிருக்கிறது.

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் மாதவன், சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தை குறித்து பேசி இருந்தார். அவர் கூறியதாவது, 'கஜினி' திரைப்படத்தின் கதையை முருகதாஸ் முதலில் என்னிடம் தான் வந்து கூறினார்.

surya

அந்த படத்தின் கதை பிடிக்கவில்லை என்பதால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இதன் பின்பு பல நடிகர்களிடம் கூறி இறுதியாக சூர்யா நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவந்தது. 'கஜினி' திரைப்படம் திரையிடப்பட்ட போது இப்படத்தை பார்த்து நான் நல்ல வாய்ப்பை தவறவிட்டு விட்டேன் என்று மிகவும் மனம் வருந்தினேன். இவ்வாறாக நடிகர் மாதவன் பேசியிருக்கிறார்.