"இதுவரைக்கும் பார்த்ததிலேயே இதுதான் பெஸ்ட்..." மனதார புகழ்ந்த அபிஷேக் பச்சன்!

"இதுவரைக்கும் பார்த்ததிலேயே இதுதான் பெஸ்ட்..." மனதார புகழ்ந்த அபிஷேக் பச்சன்!


abishek-bacchan-heaps-praise-for-aishwarya-rai-acting-i

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் 1997 ஆம் ஆண்டு வெளியான இருவர் திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்.

தற்போது பெரும்பாலும் இந்தி படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தாலும் மணிரத்தினம் மற்றும் சங்கர் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராய் அவ்வப்போது தமிழ் சினிமாவிற்கும் அழைத்து வந்திருக்கின்றனர். இவர் மணிரத்தினத்தின் ராவணன் மற்றும் குரு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

Bolly wood

வரலாற்று காவியமான பொன்னியின் செல்வ நாவலை தழுவி அதனை திரைப்படமாக எடுத்தார் மணிரத்தினம்  இரண்டு பாகங்களாக வெளியான அந்த திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவரது நடிப்பை அனைத்து ரசிகர்களும் மனதார பாராட்டினர்.

Bolly wood

இந்நிலையில் அவரது கணவரும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் தனது பேட்டி ஒன்றில் மனைவி ஐஸ்வர்யா ராய்  மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் நடித்ததிலேயே பொன்னியின் செல்வன் 2  நந்தினி கதாபாத்திரம் தான் மிகவும் நேர்த்தியான நடிப்பு என குறிப்பிட்டு இருக்கும் அவர் அந்த கதாபாத்திரமாகவே ஐஸ்வர்யா வாழ்ந்திருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்.