வாவ்.. ரொமான்ஸ் அள்ளுதே! நடுக்கடலில் டைட்டானிக் பட ஜோடியையே மிஞ்சிய ஆர்யா- சாயிஷா! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

வாவ்.. ரொமான்ஸ் அள்ளுதே! நடுக்கடலில் டைட்டானிக் பட ஜோடியையே மிஞ்சிய ஆர்யா- சாயிஷா! வைரலாகும் கியூட் புகைப்படம்!!


Aarya sayeesha latest photo viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர் ஆர்யா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

சாயிஷா தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பிரபலங்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் நடுக்கடலில் கப்பலில்,  டைட்டானிக் பட ஜாக்- ரோஸ் போல போஸ் கொடுத்து எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.