அப்பாவானார் நடிகர் ஆர்யா! என்ன குழந்தை தெரியுமா? செம குஷியில் பிரபல நடிகர் பகிர்ந்த குட் நியூஸ்!!

அப்பாவானார் நடிகர் ஆர்யா! என்ன குழந்தை தெரியுமா? செம குஷியில் பிரபல நடிகர் பகிர்ந்த குட் நியூஸ்!!


Aarya sayeesha couple blessed with baby girl

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடிக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த  நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாயிஷா அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் ஆர்யாவை மேலும் சந்தோஷமடைய வைக்கும் வகையில் அவருக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த சந்தோஷமான செய்தியை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனது சகோதரன் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி விவரிக்க முடியாதளவுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுப்பான அப்பாவாக பொறுப்பேற்கும் ஆர்யாவுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.