சினிமா

ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளான ஓவியாவை செம குஷியாக்கிய ஆரவ்! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

aarav support to oviyaa for 90ml movie

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து அவர் கலகலப்பு, மதயானை கூட்டம், மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் ஒருசில படங்களுக்கு பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகை ஓவியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த குறும்புகள், கலாட்டாக்கள், நடனம் மூலம் ஏராளமான   ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.மேலும் அவருக்கென ஓவியா ஆர்மி உருவானது.

   à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சகப்போட்டியாளரான ஆரவ்வை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் தற்கொலை முயற்சி செய்து  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

இந்நிலையில் மாபெரும் ரசிகர்பட்டாளத்தை பெற்ற ஓவியா அனிதா உதூப் இயக்கத்தில் நடித்து வெளிவந்த படம் 90 ml. இரட்டை அர்த்த வசனங்களுடன். ஆபாச காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு ட்ரைலர் வெளியானது முதலாகவே எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது ,  லிப் லாக் கொடுப்பது போன்று நடித்திருப்பது  ரசிகர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் ஓவியாவை தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

90 ml க்கான பட முடிவு

இந்நிலையில் நடிகர் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவியாவுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படம் உனது கேரியரில் ஒரு மிகபெரிய படமாக அமையும். இந்த படத்திற்காக நீ போட்ட உழைப்பு என்னவென்று எனக்கு தெரியும். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஓவியா உன்னுடன் எப்போதும் ஆதரவாக  நான் இருப்பேன் என கூறியுள்ளார். 


Advertisement