தன் மகளை கட்டித்தழுவும் அமீர்கான்; வைரலாகும் அழகான புகைப்படங்கள்!

aamir khaan hugs his daughter


aamir-khaan-hugs-his-daughter

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் தன்னுடைய மகளை கட்டித்தழுவும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமீர்கான் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் சமீபத்தில் ”தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்” என்ற படத்தில் வேலைகள் முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். இதற்கு அடுத்து அவர் நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. வித்தியாசமான கதைக்களத்துடன் சமுதாய பொறுப்புடைய திரைப்படங்கள் பலவற்றை இவர் எடுத்திருக்கிறார்.

Amir khan

சமீபத்தில் கூட இவரின் ”தங்கல்” படம் அந்த வகையில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய குழந்தைகளின் கல்வி தொடர்பான ”தாரே சமீன் பர்” படம் கூட பல விருதுகளை குவித்தது. மேலும் இது போன்ற திரைப்படங்களை எடுக்க மற்ற இயக்குனர்களுக்கு ஒரு முன் மாதிரியாகவும் அமைந்தது.

Amir khan

புத்தாண்டு தினத்தின் போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி அமீர்கான் கடந்த வார விடுமுறையில் தன்னுடைய நேரத்தை தன் குடும்பத்தாருடன் செலவழித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையுடன் நேரத்தை கழித்த அவரது குழந்தைகள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். குறிப்பாக அமீர் கானின் மகள் ஐரா கான் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். தந்தையுடன் அவர் நெருங்கி பழகும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Amir khan

Amir khan