சினிமா

ஓய்வு எடுக்காமல் நிறைமாத கர்ப்பிணி ஆலியா மானசா செய்த செயல்.! தீயாய் பரவும் வீடியோ.

Summary:

Aaliya manasa karthi

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து இருவரின் திருமணம் எப்பொழுது என திருமணம் ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் அவர்கள் இருவரும் எவருக்கும் சொல்லாமல், ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். 

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா இன்னும் சில நாட்களில் குழந்தை பெற்றெடுக்க உள்ள நிலையில் ஓய்வு எடுக்காமல் தனது கணவருடன் இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் ஓய்வு எடுக்க வேண்டிய நிறைமாத கர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்தது சரியா என சஞ்சிவ் கார்த்திக்கை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement