
Aadmika father died by heart attack
தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதனைத் தொடர்ந்து அவர் நரகாசுரன், காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி ஆத்மிகாவின் தந்தை திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார் அதனை தொடர்ந்து எளிமையான முறையில் அவரது இறுதி சடங்குகளை உறவினர்கள் செய்து முடித்தனர்.
இந்நிலையில் மிகவும் வருத்தத்துடன் ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அப்பா.. உங்களுக்கு குட் பை சொல்லும் வாய்ப்பு கூட எனக்கு கிடைக்கவில்லை. உங்களை மிஸ் செய்கிறேன் என சொல்வதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களிடம் எனக்கு இருக்கும் அன்பை இனிமேல் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதை நினைக்கும்போது என் மனம் வலிக்கிறது.
நீங்கள் எப்படி மறைந்து போனீர்கள். கடவுள் ஏன் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றார் என்று தெரியவில்லை. என்னுள் இருக்கும் வெற்றிடத்தை எப்போதும் நிரப்பமுடியாது. உங்களை இழந்த வலி எப்போதும் என்னுள் இருந்து கொண்டேதான் இருக்கும். நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறீர்கள் என்பதை மட்டும் நினைத்து நான் ஒவ்வொரு நாளையும் கடக்கிறேன்.
என் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், நீங்கள் சிரிப்பதை தான் நான் நினைத்துக் கொள்வேன். ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நீங்கள் என் சிறந்த ஆத்மா. எனக்குத் தெரிந்த அனைத்தும், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததுதான். நீங்கள் என்னை வலிமையாகவும் சுதந்திரமாகவும் வளர்த்தீர்கள். நான் எப்போதும் உங்களது மகளாக இருப்பேன், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த எல்லா நல்ல மதிப்புகளையும் தொடருவேன்.
நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன், துன்பத்தின் போதும் என் முகத்தில் சிரிப்பு இருக்கும். யார் என்ன சொன்னாலும் நான் எப்போதும் என்னை நம்புவேன். எப்போதும் நேர்மையாக இருப்பேன், பணத்திற்கும் செல்வத்திற்கும் மேலாக நீங்கள் மதிக்கும் கண்ணியத்தை பராமரிப்பேன். நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். எப்போதும் மற்றவர்களிடம் கருணையுடன் இருப்பேன். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற உழைப்பேன் என பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement