சினிமா

96 திரைப்படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து ரசிகர்கள் ஏமாற்றம்!!!

Summary:

96-movie special show

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’96’.மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம். விஜய் சேதுபதி - திரிஷா காதலர்களாக நடித்திருக்கும் இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. படத்தின் அதிகாலை காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் படத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்பட்டு வந்த திரைப்படம் ’96’. சி. பிரேம்குமார் இயக்கத்தியில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சி. பிரேம்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘96’ திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது தமிழ்சினிமாவில் விஜய் சேதுபதியும் முன்னணி நடிகர் என்பதால், இன்று வெளிவந்துள்ள ‘96’ படத்திற்கான சிறப்பு காட்சியை திரையிட தயாரிப்பு நிறுவனம் ஆயத்தமாகி இருந்தது.

தற்போது தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியும் முன்னணி நடிகர் என்பதால், இன்று வெளிவந்துள்ள ‘96’ படத்திற்கான சிறப்பு காட்சியை திரையிட தயாரிப்பு நிறுவனம் ஆயத்தமாகி இருந்தது.

அந்த வகையில் 96 படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.எனினும், திரையிரங்கில் படத்தை திரையிடும்போது பயன்படுத்தப்படும் ’கேடிஎம் கீ கோடு’ பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  காலை காட்சிகள் ரத்தானதால் திரையரங்கில் கூடிய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடுத்தடுத்த காட்சிகள் தடைபடாதவாறு தயாரிப்பாளர் தரப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Advertisement