சினிமா

வசூல் வேட்டை செக்க சிவந்த வானம் 6 நாட்களில் !!!

Summary:

6-day-collections-sekka-sevantha-vaanam

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம், காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. மல்டி ஸ்டாரர் படமான இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதேரி, ஜெயசுதா, டயானா உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று வெளியான இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், படத்தில் அனைத்து ஹீரோக்களுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரசிகர்களும் படத்தை ரசித்து வருகின்றனர்.

இந்த ஆண்டில், விடுமுறை தினத்தில் வெளியாகாத படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக செக்க சிவந்த வானம் உள்ளது. மேலும், நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால், வார இறுதியில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி என்பதால், படம் அதிக வசூல் ஈட்டக் கூடும் என பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரித்து உள்ளது. இயக்குனர் மணிரத்தினத்தின் இந்தபடத்திற்கும் எப்போதும் போல இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலித்து உள்ளது. ‘செக்க சிவந்த வானம்’ தமிழ்நாடு மொத்தமும் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


Advertisement