சினிமா

சாமி ஸ்கொயர் உடன் மோதும் 4 படங்கள்...! எதிர்பார்ப்பு கூடுகிறது...!

Summary:

4-film-released-in-this-weekend

இந்த வாரம் செப்டம்பர் 21 ஆம் தேதில் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. விக்ரம் நடிப்பில் சாமி 2 (சாமி ஸ்கொயர்), ராஜா ரங்குஸ்கி, ஏகாந்தம், மேடை ஆகிய 4 படங்கள் வெளிவருகின்றன. 
கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த சாமி படம்  வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது.  ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹாவும் மற்றும் முக்கிய காதாபாத்திரங்களில் காமெடி நடிகர் சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் செயல்படுகிறார். மேலும் இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் தமீன்ஸ் தயாரித்து வெளியிட இருக்கிறது. 

மேலும் ராஜா ரங்குஷ்தி படத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடிப்பில் தரணிதரன் இயக்கியுள்ள படம்  ராஜா ரங்குஸ்கி.  இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ஏகாந்தம், மேடை ஆகிய  2 படங்கள் என இந்த வாரம் 4 தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றன.

இதற்கிடையில் எந்த படம் அதிக வரவேற்பை பெரும் என விக்ரம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


Advertisement