நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு உணர்ச்சிபொங்க நன்றி கூறிய 4 குழந்தைகளின் தாய்! ஏன் தெரியுமா? வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு உணர்ச்சிபொங்க நன்றி கூறிய 4 குழந்தைகளின் தாய்! ஏன் தெரியுமா? வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!


4-children-mother-thank-heartfully-to-ragava-lawrence

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் நடன இயக்குனராக முன்னேறியவர் ராகவா லாரன்ஸ். இவர் பல முன்னணி நடிகர்களின் மெஹா ஹிட் படங்களில் நடன இயக்குனராக பட்டையைக் கிளப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடிகராக களமிறங்கிய ராகவா லாரன்ஸ் தனது திறமையான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே பெற்றார். மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப பெற்று பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு நடனம்,  நடிப்பு,  இயக்குனர்,  தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸ், எப்பொழுதுமே அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர். அதுமட்டுமின்றி வறுமையில் நலிந்தோருக்கு ஓடிச்சென்று உதவி செய்யக்கூடிய மாபெரும் மனம் படைத்தவர். இதனாலேயே அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மரியாதைக்குரியவராக உள்ளார்.

இந்நிலையில் அவரது உதவியை பெற்ற தாய் ஒருவர் நன்றி தெரிவித்து பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரே பிரசவத்தில் பிறந்த தனது குழந்தைகளின் படிப்பிற்காக கடந்த 4 வருடங்களாக ராகவா லாரன்ஸ் உதவி வருகிறார். மேலும் தற்போது கொரோனா காலக்கட்டத்திலும் முடியாது என மறுக்காமல் தொடர்ந்து உதவி வருவதாக அந்த தாய் கூறியுள்ளார். மேலும் இந்த உதவியை செய்ததற்கு மனமார்ந்த நன்றி. நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழவேண்டும் என  உணர்ச்சிபொங்க நன்றி தெரிவித்துள்ளார்.