சினிமா

அட.. சிம்புவின் அடுத்த படத்திற்காக ஒன்றாக இணையும் 10 பிரபல இயக்குனர்கள்! யார் யார்னு பார்த்தீர்களா!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் புதிய பட டைட்டிலை 10 இயக்குனர்கள் ஒன்றாக வெளியிடவுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் டைட்டில் வரும் டிசம்பர் 24-ந் தேதி அதாவது நாளை தலைப்பு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தற்போது இந்த டைட்டில் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் வெங்கட்பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் போன்ற 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement