மகிழ்ச்சியோ மகிழ்ச்சி... 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!!
தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு சுமார் ரூ.4,500 வரை விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைவு
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.960 சரிந்து ரூ.1,01,560 ஆக உள்ளது.
உலகச் சந்தை சரிவின் தாக்கம்
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்குவதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து வருவது விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மேலும் குறையுமா தங்கம் விலை?
தற்போதைய சந்தை நிலவரம் தொடர்ந்து நீடித்தால், வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும், சர்வதேசச் சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே உள்நாட்டில் தங்கத்தின் விலை அமையும்.