சினிமா

பிக்பாஸ் 4-வது சீசனில் நடிகை சுனைனா பங்கேற்கிறாரா? அவரே கொடுத்த விளக்கம்!

Summary:

actress Sunainaa talk about bigboss

தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். இந்நிலையில் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4க்கான வேலைகள் துவங்கிவிட்டதால் தமிழிலும் வருகிற செப்டம்பர் மாதம் இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.அந்தவகையில் முதற்கட்ட வேலையாக போட்டியார்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் 4-வது சீசனில் நடிகைகள் அதுல்யா, சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சமூக வலைதலங்களில் தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரசிகர்கள் பலர் அந்தந்த நடிகைகளிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்ப்போது இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ள நடிகை சுனைனா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சென்று விட்டால் என்னுடைய படங்களை யார் முடிப்பது.? ஒருபோதும் நான் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன். நன்றி என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டார்.


 


Advertisement