தவறு செய்தால் கேப்டனாக இருந்தாலும் இனி அதோ கதிதான்.! நிக்சனுக்கு காத்திருக்கும் ஷாக்.!biggboss-gave-nixon-a-shock

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக இதற்கு முன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற அனன்யா மற்றும் விஜய் வர்மா உள்ளிட்ட இருவரும் மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். சென்ற வாரம் நடந்த கேப்டன் டாஸ்கில் வெற்றியடைந்த நெக்சன் நடப்பு வாரம் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த வீட்டிற்கு தலைவராகிவிட்டால் நாமினேஷன் இல்லை என்று தான் இதுவரை பிக்பாஸ் வீட்டின் விதி இருந்து வந்தது.

Bigg boss

ஆனால் தற்சமயம் அந்த விதி மாற்றி , வீட்டின் தலைவராகவுள்ள நிக்சனுக்கு புதிய தொந்தரவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டிருக்கிறது. நிக்சன் தலைமையின் கீழ் தனக்கு அநீதி ஏற்பட்டிருக்கிறது என்று யாராவது நினைத்தால், நியாயம் கேட்டு இந்த மணியை அடிக்கலாம். அவர்கள் வழங்கும் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிக்சனின் தலைவர் பதவி பறிபோகும் என்று கூறப்படுகிறது.

Bigg boss

அதோடு மட்டுமல்லாமல், நேரடியாக நாமினேட் செய்யப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று பிக்பாஸ் தெரிவித்திருக்கிறார். ஆகவே நடப்பு வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் வீட்டிற்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது.