இந்திய விடுதலை போரில் பகத்சிங்கின் பங்கு என்னெல்லாம் தெரியுமா?

இந்திய விடுதலை போரில் பகத்சிங்கின் பங்கு என்னெல்லாம் தெரியுமா?



Responsibilities of bhagat singh for india freedom

இந்திய விடுதலை போராட்டங்களை அறிந்த அனைவர்க்கும் நிச்சயம் பகத்சிங் பற்றி தெரிந்திருக்கும். இந்தியாவின் விடுதலைக்காக உயிரை விட்ட வீரர்களில் பகத்சிங்கும் ஒருவர்.

1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் பகத்சிங். இவர் ஒரு சீக்கிய குடும்பத்தை சார்ந்தவர்.

bhagat singh

தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். 

‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.