பகத்சிங் ஜெயந்தி காரணமும் வரலாறும்!

பகத்சிங் ஜெயந்தி காரணமும் வரலாறும்!



Reasons for bhagath singh jayanthi

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளைதான் நாம் பகத்சிங் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். ஒவொரு வருடமும் செப்டம்பர் 28 ஆம் தேதிதியன்று பகத்சிங் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் பகத்சிங். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்படுகிறார்.

ஆங்கில ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் இவரும் ஒருவர் ஆவர்.
bhagat singh

1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28  ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் பகத்சிங். இவர் ஒரு சீக்கிய குடும்பத்தை சார்ந்தவர்.

இந்த வருடம் 110 வது பகத்சிங் ஜெயந்தியை நாம் கொண்டாட இருக்கிறோம்.