புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சீறிய இந்திய பந்துவீச்சாளர்கள்!! சரிந்தது பாகிஸ்தான்!!
ஆசியா கோப்பையின் 5 வது ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா அணி சார்பில் புவனேஸ்வர் மற்றும் பும்ராஹ் புதிதாக சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்
இமாம்-உல்-ஹக் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது ஓவரில் புவனேஸ்வர் பதில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பக்கர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமல் ஐந்தாவது ஓவரில் புவனேஸ்வர் பதில் அவுட்டாக பாகிஸ்தான் அணி 3 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.
பின்னர் வந்த பாபர் ஆசாம் மற்றும் சோயிப் மாலிக் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆட பாகிஸ்தான் 20 ஓவரில் 80 ரன்களை கடந்தது. ஆனால் இது நிலைக்கவில்லை. குலதீப் யாதவ் சுழலை சமாளிக்க முடியாமல் பாபர் ஆசாம் 47 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதன் பிறகு கேதார் ஜாதவ் பந்துவீச்சில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் ஒவொன்றாக சரியாய் ஆரம்பித்தன. சோயிப் மாலிக் மட்டும் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியா பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
இந்த எளிமையான இலக்கை இந்தியா நிச்சயம் வென்று விடும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.