
Key moments of asiacup 2018 final
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஆசிய கோப்பைக்கான 14ஆவது ஒருநாள் கிரிக்கெட்தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் போராடி வென்றது.
இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் இறுதி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பரபரப்பான இறுதி போட்டியின் முக்கியமான தருணங்கள் இதோ உங்களுக்காக.
திடீரென துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட மெஹிடி ஹசான்.
முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த லிட்டன் தாஸ், மெஹிடி ஹசான் ஜோடி.
52 ரன்னில் லிட்டன் தாஸ் கொடுத்த கேட்சை தவறவிட்ட சாகல்.
சர்வதேச அளவில் முதல் சதத்தை கடந்த லிட்டன் தாஸ்.
21 ஆவது ஓவரில் மெஹிடி ஹசான் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்த கேதர் ஜாதவ்.
ரஹீம் விக்கெட்டை வீழ்த்திய ஜாதவ்.
மக்மதுல்லா, லிட்டன் தாஸ், மோர்டசா விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப்.
பும்ராவின் யார்க்கரில் வெளியேறிய வங்கதேசத்தின் கடைசி விக்கெட்.
35 ரன்களில் 2 விக்கட்டுகளை எடுத்த வங்கதேச அணியின் கொண்டாட்டம்.
48 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை வீழ்த்திய ரூபல்...
அதிகமான பந்துகளை வீணாக்கி 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி.
முக்கியமான தருணத்தில் அவுட்டாகி வெளியேறிய தோனி.
காயம் காரணமாக அவதிப்பட்டு 38 ஆவது ஓவரில் வெளியேறிய ஜாதவ்.
இக்கட்டான சூழ்நிலையில் 46 ஆவது ஓவரில் சிக்சர் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய புவனேஸ்வர்.
கடைசி பந்தில் சந்தித்த தோல்வியை தாங்க முடியாமல் வங்கதேச வீரர்.
Advertisement
Advertisement