×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு பொண்ணா..? முகத்தில் ஆசிட் வீசி முகத்தை சிதைத்த காதலன்! சிறையிலிருந்து வந்ததும் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு....! கதறும் தந்தை.... திடுக்கிடும் பின்னணி..!!!

துருக்கியில் முகத்தில் ஆசிட் வீசி பார்வையைப் பறித்த முன்னாள் காதலனை, சிறையிலிருந்து வெளியே வந்ததும் 18 வயது இளம்பெண் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

துருக்கியில் தனது முகத்தில் ஆசிட் வீசி கடுமையாகத் தாக்கிய முன்னாள் காதலனை, சிறையிலிருந்து விடுதலையானதும் 18 வயது இளம்பெண் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்து முகம் சிதைந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், சிறையில் இருந்த காதலனின் கடிதங்களால் மனம் மாறியதாக கூறப்படுகிறது. தந்தைக்குக் கூட தெரியாமல் திருமணம் செய்துகொண்டதால் குடும்பத்திலும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டுள்ளது.

காதலனைப் பிரிந்ததால் ஆசிட் வீசிய கொடூரம்

துருக்கியைச் சேர்ந்த 18 வயதான பெர்வின், தனது காதலன் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியதால் அவரை விட்டு பிரிய முடிவு செய்துள்ளார். ஒருமுறை காதலன் முகத்தில் குத்தியதில் மூக்கு உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உறவை முறித்துக்கொள்ள பெர்வின் முடிவெடுத்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளைஞன் தன்னுடன் வாழாவிட்டால் பெர்வினையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தை பெத்தெடுத்த 10 நாட்களில் 14 வயது இளந்தாய் கணவனிடம் கேட்ட ஒற்றைக் கேள்வி..! அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி... நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!!

இதற்கிடையே, பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெர்வின் மீது அந்த இளைஞன் ஆசிட் வீசியுள்ளார். இந்தத் தாக்குதலில் பெர்வினின் வலது கண் பார்வை பறிபோனதுடன், முகமும் கடுமையாகச் சிதைந்தது. கொடூரத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு நீதிமன்றம் 13 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.

சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள்.. மாறிய முடிவு

சிறையில் இருந்தபடியே அந்த நபர் பெர்வினிடம் மன்னிப்புக் கேட்டு கடிதங்களை எழுதத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சுமார் 20 பக்கங்கள் வரை நீண்ட அந்தக் கடிதங்களைப் படித்த பெர்வின், காதலனை மன்னித்ததுடன், இன்னும் அவரைக் காதலிப்பதாகவும் பிரிந்த ஏக்கத்தில் இரவு முழுவதும் அழுவதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவருக்கு எதிராக அளித்த புகாரையும் திரும்பப் பெற்றுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வழங்கப்பட்ட சிறைச் சலுகைகள் காரணமாக, தண்டனை அனுபவித்து வந்த அந்த நபர் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே விடுதலையானதாகக் கூறப்படுகிறது. சிறையிலிருந்து வெளியே வந்த அவரை, பெர்வின் தனது தந்தைக்குக் கூட தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மகளின் முடிவால் தந்தை கடும் அதிர்ச்சி

மகளின் திருமண முடிவை அறிந்த அவரது தந்தை கடும் கோபமும் மனவேதனையும் அடைந்துள்ளார். 'இனி நீ என் மகளே இல்லை' என்று கூறி மகளுடனான உறவைத் துண்டித்துள்ளார். ஆசிட் தாக்குதலுக்குப் பிறகு மகளின் வாழ்க்கைக்காகப் போராடிய குடும்பத்தினர், தங்களுக்கு இவ்வளவு வேதனையை ஏற்படுத்திய நபரையே அவர் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுஇத்துள்ளார் 

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர்..! திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன் நடந்த அதிர்ச்சி... பகீர் பின்னணி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#துருக்கி ஆசிட் தாக்குதல் #பெர்வின் #முன்னாள் காதலன் திருமணம் #Turkey Acid Attack #வைரல் செய்தி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story