×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாற்றுத்திறனாளி மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர்..! திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன் நடந்த அதிர்ச்சி... பகீர் பின்னணி..!!!

பிரிட்டன் குடியுரிமைக்காக மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் இளைஞர், இரண்டாவது திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார்.

Advertisement

பிரிட்டனில் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிப் பெண்ணை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தான் இளைஞர், பின்னர் அவரை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யத் திட்டமிட்ட நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அவரது இரண்டாவது திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில் நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கராச்சியைச் சேர்ந்த அந்த இளைஞர், பிரிட்டனில் விரைவாகக் குடியேறுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணுடன் பழகி, காதலிப்பது போல் நடித்துள்ளார். அவரை நம்பிய அந்தப் பெண், தனது பூர்வீக மதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறி, இளைஞரைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நிதியுதவி அளித்ததுடன், பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட உதவிகளையும் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தொழிலதிபர்னு சொன் வாலிபர்! நேரில் பார்க்க சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.... டேட்டிங் ஆப்பில் நடந்த பகீர் சம்பவம்!!!

குடியுரிமை பெற்றதும் மாறிய மனம்

திருமணத்துக்குப் பிறகு பிரிட்டனில் குடியேறி, அந்நாட்டு பாஸ்போர்ட்டையும் பெற்ற அந்த இளைஞர், பின்னர் தனது மனைவியைப் பிரிய முடிவு செய்துள்ளார். இனி பிரிட்டனில் வாழ அந்தப் பெண்ணின் உதவி தேவையில்லை என நினைத்த அவர், பாகிஸ்தானில் பெண் மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டார்.

இதற்காக பாகிஸ்தான் திரும்பிய அவரிடம், நெருங்கிய நண்பர் ஒருவர் பலமுறை அறிவுரை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கஷ்டமான காலத்தில் பணம் செலவழித்து, மதம் மாறி அவருக்கு ஆதரவாக இருந்த பெண்ணை கைவிட வேண்டாம் என நண்பர் எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனால், தான் மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசை நிறைவேறாததால் தற்போது மருத்துவரைத் திருமணம் செய்யப் போவதாகவும் கூறி, முதல் மனைவியை விவாகரத்து செய்யும் முடிவில் அவர் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழப்பு

இதற்கிடையே, பாகிஸ்தானில் நிச்சயிக்கப்பட்ட பெண் மருத்துவருடன் திருமணம் நடைபெற இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், திருமணத்துக்கான பொருட்களை வாங்க வீட்டிலிருந்து வெளியே சென்ற இளைஞர் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கதையை அவரது நண்பர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், முதல் மனைவியை ஏமாற்ற நினைத்த இளைஞருக்கு இது கர்மாவின் தண்டனையா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கும் அவர் மேற்கொண்ட திருமண முடிவுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூற முடியாது.

 

இதையும் படிங்க: சுற்றி வளைத்த பொதுமக்கள்! மாட்டிக்குவோமோ என்ற பயத்தில்... 4-வது மாடியிலிருந்து தப்பிக்க முயன்று கீழே விழுந்த திருடன்! பகீர் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பாகிஸ்தான் இளைஞர் #Britain Citizenship #திருமண மோசடி #சாலை விபத்து #கர்மா விவாதம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story