குழந்தை பெத்தெடுத்த 10 நாட்களில் 14 வயது இளந்தாய் கணவனிடம் கேட்ட ஒற்றைக் கேள்வி..! அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி... நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!!
ஈரானில் 13 வயதில் கட்டாயத் திருமணம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி, குழந்தை பெற்றெடுத்த 10 நாட்களிலேயே கணவரால் அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் 14 வயது சிறுமி ஒருவர், குழந்தை பெற்றெடுத்த 10 நாட்களிலேயே தனது 20 வயது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோரைப் பார்க்கச் செல்ல அனுமதி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் சிறுமி கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.
ஈரானின் கெர்மான் மாகாணத்தைச் சேர்ந்த சோகந்த் மொஷ்டரேகி என்ற சிறுமி, தனது 13 வயதில் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர்..! திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன் நடந்த அதிர்ச்சி... பகீர் பின்னணி..!!!
பிரசவத்தின்போது சாலை விபத்தில் உயிர் தப்பிய சிறுமி
பிரசவத்திற்காக ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது சாலை விபத்தில் சிக்கிய சோகந்த், அதிலிருந்து உயிர் தப்பி குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்து 10 நாட்களே ஆன நிலையில், தனது பெற்றோரைப் பார்க்கச் செல்ல அனுமதி கேட்டு கணவரிடம் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கணவர் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் சிறுமி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தினருடன் பேசவும் வெளியே செல்லவும் தடை
சோகந்த் தனது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதை கணவர் தடுத்து வந்ததாகவும், வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரங்களில் அவரைப் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்தியதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், சிறுமியின் கொலை தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை திருமணச் சட்டங்கள் குறித்து எழும் கண்டனம்
கைது செய்யப்பட்ட கணவர், குடும்பத் தகராறு காரணமாகவே மனைவியைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கொலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஈரானில் நடைமுறையில் உள்ள குழந்தை திருமணச் சட்டங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சுற்றி வளைத்த பொதுமக்கள்! மாட்டிக்குவோமோ என்ற பயத்தில்... 4-வது மாடியிலிருந்து தப்பிக்க முயன்று கீழே விழுந்த திருடன்! பகீர் வீடியோ..!!!