12 குழந்தைகள்... 9 வயதில் தொடங்கி 9 ஆண்டுகள் நீடித்த கொடுமை! பெற்ற மகள்களையே சீரழித்த கணவன்! தூதுபோன தாய்..... அதிரவைக்கும் உண்மை பின்னணி!!!
ரஷ்யாவில் பல ஆண்டுகளாக மகள்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மைனர் மகள்களை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தையின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த குழந்தைகளின் தாய்க்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குடும்பத்தின் பொருளாதார நிலையை காரணம் காட்டி, மகள்களை தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் தள்ளியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
9 வயதில் தொடங்கிய கொடுமை
36 வயதான ரோமன் கிராசிகோவ், தனது மைனர் மகள்களுக்கு 9 அல்லது 10 வயதாக இருந்தபோதே பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. சுமார் 9 ஆண்டுகளாக இந்தக் கொடுமை தொடர்ந்து நடந்துள்ளது. மகள்கள் தாயிடம் நடந்தவற்றை கூறியபோதும், அவர்களுக்கு ஆதரவாக நிற்காமல் தந்தையின் விருப்பத்துக்கு கீழ்ப்படியுமாறு கூறியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் முக்கிய வருமான ஆதாரமாக இருந்த தந்தைக்கு எதிராக செல்லக்கூடாது என்ற நிலைப்பாட்டை தாய் எடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனால், குழந்தைகள் நீண்ட காலம் தங்களுக்குள் ஏற்பட்ட வேதனையை மறைத்து வாழ வேண்டிய சூழல் உருவானது.
கல்லூரிக்கு சென்ற மூத்த மகளால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
பல ஆண்டுகளாக குடும்பத்துக்குள் மறைக்கப்பட்டிருந்த கொடுமை, மூத்த மகள் கல்லூரிக்குச் சென்ற பின்னர் வெளியுலகுக்கு தெரிய வந்தது. அவர் தனது காதலனிடம் தனக்கும் சகோதரிகளுக்கும் நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
போலீசார் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து ரோமன் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையில், குழந்தைகளின் தாயான 35 வயது டட்யானா கிராசிகோவாவும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் நடந்த கொடூரம்
இளம் வயதிலேயே சந்தித்து திருமணம் செய்துகொண்ட ரோமன் மற்றும் டட்யானா தம்பதிக்கு 12 குழந்தைகள் இருந்தனர். 2019-ல் ஏற்பட்ட தீ விபத்தில் அவர்களது நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது குடும்பம் வழக்கமான வாழ்க்கையை நடத்தி வந்தது போலவே அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்துள்ளது.
ஆனால், வீட்டுக்குள் பல ஆண்டுகளாக நடந்த பாலியல் வன்கொடுமை தற்போது நீதிமன்ற விசாரணை மூலம் வெளிப்பட்டுள்ளது. மூத்த மகள் தைரியமாக தகவல் தெரிவித்ததன் பின்னரே போலீஸ் விசாரணை தொடங்கி, குடும்பத்துக்குள் மறைக்கப்பட்டிருந்த உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்தன.
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழாவில் நடந்த உயிர் சேதம்! 2 பேர் பரிதாப பலி.... 212 பேர் படுகாயம்! நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!