×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இவ்வளவு டார்ச்சலா? காதலில் தொடங்கி கட்டுப்பாட்டில் முடிந்த உறவு! 2 வருடங்களாக மூடிய அறைக்குள் நடந்த கொடூரம்... அதிர்ச்சியில் உறைந்துபோன நீதிமன்றம்..!!!

இங்கிலாந்தில் காதலியை இரண்டு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் ரீதியாக துன்புறுத்திய லீ யேட்ஸுக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

Advertisement

இங்கிலாந்தில் காதலியை இரண்டு ஆண்டுகளாக கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைக்கு ஆளாக்கியதாக லீ யேட்ஸ் என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நிலையில் தொடங்கிய காதல், பின்னர் டெய்சியின் சுதந்திரத்தை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இறுதியில் பொது இடத்தில் நடந்த தாக்குதல் மூலம் அவரது கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

காதலில் தொடங்கி கட்டுப்பாட்டில் முடிந்த உறவு

டெய்சியும் லீ யேட்ஸும் கடந்த 2020-ம் ஆண்டு டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகினர். ஆரம்பத்தில் அன்பாகவும் அக்கறையுடனும் பழகிய யேட்ஸ், சில மாதங்களிலேயே டெய்சியின் வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: World News: அதிபயங்கரம்... இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!

என்ன உடை அணிய வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்பதைக்கூட அவரே முடிவு செய்துள்ளார். குளியலறையில் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளார். கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து கொடுமைப்படுத்தியதுடன், எச்சில் உமிழ்வது, சிறுநீர் கழிப்பது போன்ற அவமானப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களை சந்திக்கவும் தடை

யேட்ஸின் கட்டுப்பாடு டெய்சியின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீண்டதாக கூறப்படுகிறது. நண்பர்களை சந்திப்பது, தனக்கு விருப்பமான வகையில் வெளியே செல்வது உள்ளிட்ட சாதாரண விஷயங்களுக்குக்கூட அவருக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகளாக உளவியல் சித்திரவதை மற்றும் உடல் ரீதியான கொடுமைகளை டெய்சி எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொது இடத்தில் யேட்ஸ் டெய்சியை தாக்கியுள்ளார். இதை நேரில் பார்த்த அண்டை வீட்டுக்காரர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறை அங்கு வந்ததைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து டெய்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

நாட்குறிப்புகள் மூலம் நீதிமன்றத்தில் சாட்சி

தனக்கு நேர்ந்த சம்பவங்களை டெய்சி ரகசியமாக நாட்குறிப்புகளில் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த பதிவுகளின் அடிப்படையிலும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்றது.

டெய்சியை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்த குற்றத்திற்காக யேட்ஸுக்கு லூயிஸ் கிரவுன் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீண்ட காலமாக வெளியில் சொல்ல முடியாமல் இருந்த கொடுமைகள், காவல்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: நடுக்கடலில் மீனவர்க்கு நடந்த அதிர்ச்சி! முகத்தை மூடிய 8 கரங்கள்.... மூச்சு கூட விட முடியல! திக் திக் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இங்கிலாந்து காதலி சித்திரவதை #Lee Yates #Daisy Abuse Case #குடும்ப வன்முறை #UK Court
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story