×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

World News: அதிபயங்கரம்... இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!

Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

அதிபயங்கர நிலநடுக்கத்தால் மீண்டும் இந்தோனேஷிய மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

நிலநடுக்கம்: 

இந்தோனேஷியா நாட்டில் உள்ள டேங்கோரா மாகாணத்தில், இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

இதையும் படிங்க: World News: விமானம் விழுந்து நொறுங்கி சோகம்.. 13 பேர் பரிதாப பலி.! 

எச்சரிக்கை: 

இதனால் அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வியல் மையம் சார்பில், சுனாமி எச்சரிக்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான இடங்களில் இருக்கும் மக்கள் உயர்ந்த நிலங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடரும் சோகம்: 

கடந்த 1992 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு 2500 பேர் உயிரிழந்த நிலையில், 2004 நிலநடுக்கம் இந்தியா உட்பட பல நாடுகளையும் சேர்த்து 2 லட்சம் பேரின் உயிரை காவு வாங்கியது. அதனைத்தொடர்ந்து அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் இந்தோனேஷியா மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது. 

சுமார் 17 ஆயிரம் தீவுகளை இணைந்து ஒருங்கிணைத்து உருவான இந்தோனேஷியா நாடு, பசுபிக் ரிம் எனப்படும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் இருக்கும் தீவு நாடாக இருக்கிறது. இதனால் அங்கு அதிக நிலநடுக்கமும் ஏற்படுகிறது. 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய முடிவு எடுத்த அமெரிக்கா.. கலக்கத்தில் நிறுவனங்கள்.. 200% வரி..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #earthquake #Tsunami
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story