சாதாரண பல் வலியில் தொடங்கிய அதிர்ச்சி! 9 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நடந்த பெரும் சோகம்! 33 வயதில் முடிந்த வாழ்க்கை... விழிப்புணர்வை உண்டாக்கும் இளம்பெண்ணின் கதை!!!
அமெரிக்க இளம்பெண் நிக்கோல் கோவல்ஸ்கி-க்ளீன்சாசருக்கு பல் வலியாக தொடங்கிய பாதிப்பு அரிய உமிழ்நீர்ச் சுரப்பி புற்றுநோயாக மாறி உயிரிழப்பில் முடிந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோல் கோவல்ஸ்கி-க்ளீன்சாசர், 25 வயதில் சாதாரண பல் வலி என நினைத்த பாதிப்பு காரணமாக மருத்துவப் பரிசோதனைகளை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் பல் மருத்துவரிடம் பிரச்சினை எதுவும் தெரியவில்லை. ஆனால் வலி நீடித்து, வீக்கம் ஏற்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பயாப்ஸி பரிசோதனை அதிர்ச்சிகரமான முடிவை வெளிப்படுத்தியது. அவருக்கு அரிய வகையான உமிழ்நீர்ச் சுரப்பி புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பல் வலியில் தொடங்கிய அதிர்ச்சி
பல் பகுதியில் ஏற்பட்ட வலி முதலில் வழக்கமான பிரச்சினையாகவே கருதப்பட்டது. பல் பரிசோதனையிலும் குறிப்பிடத்தக்க கோளாறு தெரியாததால், நிக்கோல் தொடர்ந்து இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முயன்றார். ஆனால் வலி குறையாமல், அந்தப் பகுதியில் வீக்கம் அதிகரித்தது. இதையடுத்து மருத்துவர்கள் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கொடூர சம்பவம்..! வெறும் 12 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 5 சிறுமிகள்! 13 வயது சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று சீரழித்த வாலிபர்...!!!
பயாப்ஸி முடிவில் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிக்கோலுக்கு பல் அகற்றும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அன்னப் பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து கடுமையான கதிர்வீச்சு சிகிச்சையையும் அவர் எதிர்கொண்டார்.
மீண்டும் தாக்கிய புற்றுநோய்
சிகிச்சைகளுக்குப் பிறகு புற்றுநோய் கட்டுப்படுத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், மீண்டும் நோய் தாக்கியது. இதனால் நிக்கோலின் மருத்துவப் பயணம் மேலும் நீண்டது. தொடர்ந்து 9 ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடிய அவர், தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
தான் கடந்து வந்த சிகிச்சை மற்றும் வேதனைகளை “நிக்கோலின் கோணல் சிரிப்பு” என்ற பெயரில் இணையத்தில் பகிர்ந்து வந்தார். உடலில் தொடர்ந்து தோன்றும் எந்தவொரு வலியையும் அலட்சியப்படுத்தாமல், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
33 வயதில் முடிந்த நீண்ட போராட்டம்
ஒன்பது ஆண்டுகளாக நோயுடன் போராடி வந்த நிக்கோல், தனது 33வது வயதில் உயிரிழந்தார். சாதாரண பல் வலியாக தொடங்கிய பாதிப்பு அரிய புற்றுநோயாக மாறி, பல ஆண்டுகள் சிகிச்சை மற்றும் போராட்டத்துக்குப் பிறகு அவரது வாழ்க்கையை முடித்தது. அவரது கதை, நீடிக்கும் உடல் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதன் அவசியம் குறித்த புற்றுநோய் விழிப்புணர்வை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: ஐயோ... நீங்க சொல்லறது மாறி இல்ல! விமான ஜன்னலில் விநாயகர் ஓவியம்..! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெண்... வைரல் வீடியோ..!!!