×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

26,000 அடி உயரத்தில் கட்டுக்கடங்காமல் வந்த தண்ணீர்....! நொடியில் நீரில் ஊறிய ஊர்கள்..! 160 உடல்கள் மீட்பு,750 பேர் மாயம்... பேரதிர்ச்சி உண்டாக்கும் பெரும் சோகம்!!!

திபெத் ஏரி உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நேபாளத்தில் 157 பேர் உட்பட 160 பேர் உயிரிழந்துள்ளனர். 133 இந்தியர்கள் உள்ளிட்ட 750 பேர் மாயமாகியுள்ளனர்.

Advertisement

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் ஏரி உடைந்து பெருக்கெடுத்த நீர் நேபாளத்தின் கோஷி ஆற்றில் கலந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் ரசுவா, டாடிங் மாவட்டங்களில் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை திபெத்தில் 3 பேரும், நேபாளத்தில் 157 பேரும் என மொத்தம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 133 இந்தியர்கள் உட்பட சுமார் 750 பேர் மாயமாகியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

திபெத் பகுதியில் 26,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்த ஏரி உடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்டுக்கடங்காமல் வெளியேறிய நீர் ஆற்றில் கலந்து வேகமாக பாய்ந்தது. வெள்ளத்தின் தாக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட பாலங்கள், சாலைகள் மற்றும் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! இமயமலை பனிப்பாறை சரிவால் தான் நேபாளத்தில் பெரு வெள்ளம்! 19 பாலங்கள், கார்கள், வீடுகள் அடித்து செல்லும் காட்சி... நேபாள போலீஸ் வெளியிட்ட வெள்ள பாதிப்பு காட்சிகள்!!!

நேபாளத்தின் பல பகுதிகளில் கடும் சேதம்

ரசுவா மற்றும் டாடிங் மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் பல பகுதிகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை விரைவாக மீட்பதில் சவால் நீடிக்கிறது.

இதனிடையே, நேபாள பெருவெள்ளம் காரணமாக காணாமல் போனவர்களை தேடும் பணியில் நேபாள ராணுவம் களமிறங்கியுள்ளது. 15-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

133 இந்தியர்கள் மாயம்; 57 தமிழர்கள் சிக்கினர்

வெள்ளத்தில் மாயமானவர்களில் 133 பேர் இந்தியர்கள். அவர்களில் சுற்றுலா சென்ற 57 தமிழர்களும் அடங்குவர். அவர்களின் நிலை குறித்து உறவினர்கள் கவலையில் உள்ள நிலையில், இந்திய அதிகாரிகளும் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்களும் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் மீட்பு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மாயமானவர்களின் நிலவரத்தை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

இதையும் படிங்க: ஐயோ...கடவுளே! அவுங்களோட மனசு என்னம்மா துடுச்சுருக்கும்.... திடீரென பாய்ந்து வந்த ப்ளாஷ் ஃபிளட் வெள்ளம்! நேபாளத்தை உலுக்கிய வெள்ள வீடியோக்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நேபாள வெள்ளம் #Tibet Glacier #Nepal Flood #133 இந்தியர்கள் #Tamil Pilgrims
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story