×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ...கடவுளே! அவுங்களோட மனசு என்னம்மா துடுச்சுருக்கும்.... திடீரென பாய்ந்து வந்த ப்ளாஷ் ஃபிளட் வெள்ளம்! நேபாளத்தை உலுக்கிய வெள்ள வீடியோக்கள்..!!!

நேபாளத்தின் ரசுவா பகுதியில் திடீர் ப்ளாஷ் ஃபிளட் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பயணிகளின் நிலை குறித்து தகவல் இல்லை.

Advertisement

வடக்கு நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் ப்ளாஷ் ஃபிளட் எனப்படும் ஆக்ரோஷ வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை சரிவு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகியவை வெள்ளத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆற்றில் உருவான பிரம்மாண்ட தடுப்பு உடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளம் சில நொடிகளில் பெரும் வேகத்தில் பாய்ந்துள்ளது.

சில நொடிகளில் மாறிய ஆற்றுப்பாதை

ரசுவா பகுதியில் உள்ள போட்டோ கோஷி நதியின் துணைநதிப் பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிப்பாறைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆற்றின் போக்கில் தடை உருவாகி, பின்னர் அது உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெருமளவு தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறி, ஆற்றங்கரையோர பகுதிகளை அடித்துச் சென்றுள்ளது.

இதையும் படிங்க: நடுங்க வைக்கும் காட்சி...! ஒரு ஊரையே சூறையாடிய சூறாவளி.! காற்றில் கண்டமேனிக்கு பறந்த கார்கள், வீடுகள்...! ஒட்டுமொத்த கிராமமே இருட்டில் தவிக்குது... ஷாக் வீடியோ.!!!

ஹோட்டல்களில் இருந்து தப்பியோடிய பயணிகள்

வெள்ளத்தின் தாக்கத்தை காட்டும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சுற்றுலாத் தலத்தில் தங்கியிருந்த பயணிகள் ஆபத்தை உணர்ந்து ஹோட்டல்களை விட்டு வெளியேற முயன்ற நிலையில், ராட்சத அலைபோல் வந்த வெள்ளம் கட்டிடங்கள் மற்றும் பொருட்களை அடித்துச் சென்ற காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

நூற்றுக்கணக்கான பயணிகள் குறித்து தகவல் இல்லை

பெருவெள்ளத்தால் அப்பகுதியில் வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளன. வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான பயணிகளின் தற்போதைய நிலை குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து, இந்தியா-நேபாள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிலைமையை மதிப்பிடும் பணிகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

இதையும் படிங்க: ஐயோ... கடவுளே.! வரதட்சணை கொடுமையால் நடந்த கொடூரம்! 5-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த புதுப்பெண்... யார் காரணம்? குலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நேபாள வெள்ளம் #Flash Flood #Rassuwa #Nepal Disaster #இந்திய பயணிகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story