×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மா கோவப்படாத்தீங்க.... எங்க தப்பை மன்னிச்சு உங்க கோபத்தை குறைச்சிக்கோங்க ..! பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு பிரார்த்தனை செய்த பெண்...! நெஞ்சை உருக்கும் நேபாள வெள்ள வீடியோ..!!!

வடக்கு நேபாளத்தில் கொந்தளித்து ஓடும் வெள்ள நதியை அமைதிப்படுத்தக் கோரி பெண் ஒருவர் கைகூப்பிப் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

வடக்கு நேபாளத்தில் கொந்தளித்து ஓடும் வெள்ள நதியின் கரையில் நின்றபடி, பெண் ஒருவர் கைகூப்பி பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் மாவு வைத்த சிறிய தட்டுடன் நதியை வழிபடும் அவரது காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. பெரும் இயற்கைப் பேரிடருக்கு நடுவே மனிதர்களின் நம்பிக்கை வெளிப்படும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

வெள்ளம் பெருக்கெடுத்த நதிக்கரையில் பிரார்த்தனை

வைரல் வீடியோவில், நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நதிக்கரையில் கவலையுடன் நிற்கிறார். கையில் வைத்திருந்த மாவை நதியில் அர்ப்பணித்த அவர், பின்னர் தரையைத் தொட்டு கைகூப்பி பிரார்த்தனை செய்கிறார். நதியை தாயாகக் கருதி, தங்களது தவறுகளை மன்னித்து கோபத்தைத் தணித்து அனைவரையும் காப்பாற்றுமாறு அவர் வேண்டுவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: மனுஷங்களா நீங்களாம்.? வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் காதிலிருந்து கழட்டிய தோடு, தங்க நகைகள்! கொடூர வீடியோ...!!!

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவைத் தொடர்ந்து, போட்டேகோஷி மற்றும் திரிசூலி உள்ளிட்ட நதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வடக்கு நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில், பல பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேரழிவின் நடுவே எடுக்கப்பட்டதாக கூறப்படும் வைரல் வீடியோ, இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மக்கள் எதிர்கொள்ளும் அச்சத்தையும், அவர்களின் இறை நம்பிக்கையையும் ஒரே காட்சியில் வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: நேபாள பனிப்பாறை ஏரி உடைப்பு... இமயமலையில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நேபாள வெள்ளம் #Nepal Flood #வைரல் வீடியோ #Trishuli River #Bhotekoshi River
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story