×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனுஷங்களா நீங்களாம்.? வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் காதிலிருந்து கழட்டிய தோடு, தங்க நகைகள்! கொடூர வீடியோ...!!!

நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து தங்கத் தோடுகளை சிலர் கழற்றும் வீடியோ வைரலாகி, மனிதநேயம் குறித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து சிலர் தங்கத் தோடுகளை கழற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பேரிடர் நேரத்திலும் இத்தகைய செயல் நடந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வெள்ளத்தில் மிதந்து வந்த உடல்

‘ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்தில் மிதந்து வந்த பெண்ணின் உடலை ஒருவர் மரக்கட்டையின் உதவியுடன் கரைக்கு அருகே இழுக்கிறார். பின்னர் மற்றொருவர் உடலின் காதில் இருந்த தங்கத் தோடுகளை கழற்றுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் எப்போது, எந்தப் பகுதியில் பதிவு செய்யப்பட்டன என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: நேபாள பனிப்பாறை ஏரி உடைப்பு... இமயமலையில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்

இயற்கை பேரிடரால் மக்கள் உயிரிழந்து, பலர் காணாமல் போயுள்ள நிலையில், உதவி செய்ய வேண்டிய நேரத்தில் உடலில் இருந்த நகைகளை திருடியதாகக் கூறப்படும் செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் இது மனிதநேயத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/NirmalPrasai5/status/2092837843433669038/video/1

பேரிடர் காலத்திலும் மனிதநேயம் தேவை

நேபாளத்தின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தச் சூழலில் வெளியாகியுள்ள வைரல் வீடியோ, பேரிடர் நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 26,000 அடி உயரத்தில் கட்டுக்கடங்காமல் வந்த தண்ணீர்....! நொடியில் நீரில் ஊறிய ஊர்கள்..! 160 உடல்கள் மீட்பு,750 பேர் மாயம்... பேரதிர்ச்சி உண்டாக்கும் பெரும் சோகம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நேபாள வெள்ளம் #Nepal Flood #தங்கத் தோடு திருட்டு #viral video #மனிதநேயம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story