×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

500 கோடிக்கு சொந்தக்கார தொழிலதிபர்! டைம் பார்க்க எதுக்கு ரூ.25 லட்சம் வாட்ச் வாங்கணும்... போலி ரோலக்ஸ் அணிந்த தொழிலதிபரின் அதிரவைக்கும் விளக்கம்..!!!

ரூ.500 கோடி சொத்து மதிப்புள்ள தொழிலதிபர் அணிந்திருந்த ரோலக்ஸ் கடிகாரம் போலியானது என்ற தகவல் லிங்க்ட்இனில் வைரலாகி, ஆடம்பரம் மற்றும் அந்தஸ்து குறித்து இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ரூ.500 கோடி சொத்து மதிப்புடைய தொழிலதிபர் ஒருவர் அணிந்திருந்த ரோலக்ஸ் கடிகாரம் உண்மையானது அல்ல என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தை டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ரோகன் தவான் லிங்க்ட்இனில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, ஆடம்பர பொருட்கள் மற்றும் சமூக பார்வை குறித்து இணையத்தில் தீவிர விவாதம் எழுந்துள்ளது.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடிகாரமா? இல்லை, ரூ.10 ஆயிரம் போலியா?

ரோகன் தவான், சமீபத்தில் சுமார் ரூ.500 கோடி சொத்து மதிப்புடைய பிரபல தொழிலதிபரைச் சந்தித்தபோது, அவரது கையில் சந்தை மதிப்பில் ரூ.25 லட்சத்துக்கும் அதிகம் இருக்கும் Rolex Daytona கடிகாரத்தைக் கண்டு பாராட்டியதாக தெரிவித்துள்ளார். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த அந்த தொழிலதிபர், அது உண்மையான ரோலக்ஸ் அல்ல என்றும், இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கிய உயர்தர போலி கடிகாரம் என்றும் கூறியதாக அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கல் நெஞ்சக்கார பிள்ளைகள்..! ஆதரவின்றி பிரிந்த தொழிலதிபர் உயிர்...! 3 மகள்களுடன் வீடியோ காலில் இறுதிசடங்கு! இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது..!!!

அந்தஸ்துதான் முக்கியம்; கடிகாரம் அல்ல

இதற்கான காரணத்தையும் அந்த தொழிலதிபர் விளக்கியதாக ரோகன் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் தனக்கு இருக்கும் அந்தஸ்தால், தாம் அணிந்திருப்பது போலி கடிகாரம் என்று யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்றும், மக்கள் ஒருவரின் குணம் மற்றும் சாதனைகளை வைத்தே மதிப்பிடுகிறார்கள், கடிகாரத்தின் விலையை வைத்து அல்ல என்றும் அவர் கூறியதாக பதிவில் இடம்பெற்றுள்ளது. நேரத்தைக் காட்டுவதுதான் ஒரு கடிகாரத்தின் அடிப்படை வேலை என்ற நிலையில், அதற்காக லட்சக்கணக்கில் செலவிட வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7490360156078178304?trk=public_post_embed_social-actions-reactions

இணையத்தில் கலவையான கருத்துகள்

இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ரோலக்ஸ் கடிகாரத்தை விட ஒருவரின் நற்பெயரும் அடையாளமுமே முக்கியம் என்ற கருத்தை பலர் ஆதரித்துள்ளனர். ஆடம்பரப் பொருட்களை பலர் தங்களின் தேவைக்காக அல்லாமல், பிறரின் பாராட்டைப் பெறுவதற்காக வாங்குகிறார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கூட எளிமையான கேசியோ கடிகாரங்களை அணிவதை உதாரணமாகக் கூறி, வெற்றி மற்றும் மதிப்பை விலை உயர்ந்த பொருட்கள் தீர்மானிக்காது என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: 15 நாட்கள் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் கடலில் தத்தளிப்பு! 19 பேரில் 17 பேருக்கு நேர்ந்த சோகம்..... ஸ்பெயின் கடலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rolex Daytona #LinkedIn Viral #ரோலக்ஸ் #Businessman #Luxury Watch
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story