×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல் நெஞ்சக்கார பிள்ளைகள்..! ஆதரவின்றி பிரிந்த தொழிலதிபர் உயிர்...! 3 மகள்களுடன் வீடியோ காலில் இறுதிசடங்கு! இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது..!!!

மும்பையைச் சேர்ந்த 74 வயது தொழிலதிபர் சிவச்சரன் ராம்ரத்தன் குப்தா, சோனிபட் முதியோர் இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மகள்கள் வீடியோ கால் மூலம் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மும்பையைச் சேர்ந்த 74 வயது தொழிலதிபர் சிவச்சரன் ராம்ரத்தன் குப்தா, ஹரியானாவின் சோனிபட் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை நேரில் வந்து பெற்றுக்கொள்ள மகள்கள் யாரும் வராத நிலையில், இறுதிச்சடங்குகளை அங்குள்ள நிர்வாகமே மேற்கொண்டது. மகள்கள் மூவரும் மும்பையில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் மட்டுமே இறுதி நிகழ்வில் பங்கேற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

மூன்று ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் வசிப்பு

தகவலின்படி, தொழிலதிபரான சிவச்சரன் ராம்ரத்தன் குப்தா கடந்த மூன்று ஆண்டுகளாக சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் தனியாக வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அங்கேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 15 நாட்கள் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் கடலில் தத்தளிப்பு! 19 பேரில் 17 பேருக்கு நேர்ந்த சோகம்..... ஸ்பெயின் கடலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ஊழியர்களே செய்த இறுதிச்சடங்கு

அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மும்பையில் வசிக்கும் அவரது மூன்று மகள்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் நேரில் வர இயலாது என தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கைப் பார்ப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, முதியோர் இல்லத்தின் ஊழியர்களே இறுதி ஊர்வலம் மற்றும் அனைத்து சடங்குகளையும் நடத்தி முடித்தனர்.

சமூக வலைதளங்களில் விவாதம்

பெற்ற பிள்ளைகள் இருந்தும் முதியோர் இல்லத்தில் தனிமையில் வாழ்ந்து உயிரிழந்த முதியவரின் வாழ்க்கை பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. குறிப்பாக, அவரது மகள்கள் நேரில் வராமல் வீடியோ கால் வழியாக மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு, குடும்ப உறவுகள் மற்றும் முதியோர்களின் பராமரிப்பு குறித்து பல்வேறு கருத்துகளை எழுப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: 1 இல்ல 2 இல்ல 100-க்கு மேல் பிரிட்டன் கடற்கரையில் கரை ஒதுங்கிய புது உயிரினம்.! ஜெல்லிமீன் இல்லையாம்.... அதை தொட்டால் பெரும் ஆபத்து! நீல நிறத்தில் ஜொலிக்குது....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mumbai businessman #முதியோர் இல்லம் #video call #குடும்ப உறவுகள் #Sonipat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story