×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 நாட்கள் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் கடலில் தத்தளிப்பு! 19 பேரில் 17 பேருக்கு நேர்ந்த சோகம்..... ஸ்பெயின் கடலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்குச் சென்ற அகதிகள் படகு கடலில் சிக்கியதில் 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருவரை கடற்படை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

Advertisement

வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகள் நோக்கிப் புறப்பட்ட அகதிகள் படகு கடலில் நடுவழியில் சிக்கியதில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 19 பேருடன் பயணித்த அந்தப் படகில் இருந்த 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், உயிர் தப்பிய இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

15 நாட்கள் உணவும் தண்ணீருமின்றி கடலில் தத்தளிப்பு

தகவலின்படி, படகின் இன்ஜின் பழுதடைந்ததால் அது கடலின் நடுப்பகுதியில் நின்றுவிட்டது. தொடர்ந்து 15 நாட்கள் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அகதிகள் கடலில் தத்தளித்துள்ளனர். மல்லோர்கா தீவின் தென்மேற்குப் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது.

இதையும் படிங்க: 1 இல்ல 2 இல்ல 100-க்கு மேல் பிரிட்டன் கடற்கரையில் கரை ஒதுங்கிய புது உயிரினம்.! ஜெல்லிமீன் இல்லையாம்.... அதை தொட்டால் பெரும் ஆபத்து! நீல நிறத்தில் ஜொலிக்குது....!!!

ஹெலிகாப்டர் மூலம் தீவிர தேடுதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புக் குழுவினர் சம்பவம் நடந்த கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அகதிகள் நெருக்கடி தீவிரம்

இதற்கிடையில், இபிஸா தீவு அருகே 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் 211 படகுகள் மூலம் 3,935 அகதிகள் ஸ்பெயின் பாலேரிக் தீவுகளை அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், செவுடா எல்லைப் பகுதியில் அகதிகள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், மொராக்கோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லை கடக்க முயன்றதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு மனிதக் கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத செயல்பாடுகளே முக்கிய காரணம் என்று ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியை! அந்த காரியத்துக்காக மிரட்டிய மாணவர்கள்! அதிர்ச்சி பின்னணி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#spain #பாலேரிக் தீவுகள் #Migrant Boat #அகதிகள் #Balearic Islands
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story