தாம்பரம் ரயில் நிலையத்தில் திடீரென இன்ஜின் பெட்டி மீது ஏறிய இளம்பெண்! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்! சென்னையில் பரபரப்பு...
தாம்பரம் ரயில் நிலையத்தில் திடீரென இன்ஜின் பெட்டி மீது ஏறிய இளம்பெண்! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்! சென்னையில் பரபரப்பு...
சென்னையில் தாம்பரம் ரயில்வே நிலையம் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதையின் அருகே, ஒரு ரயில் இன்ஜின் பெட்டிகளை இணைக்க நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில், இரவு 9 மணியளவில் 40 வயதுடைய ஒரு பெண் திடீரென இன்ஜின் மீது ஏறி, அப்படியே வெகு நேரம் நின்றார். இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் அவர் மின்சார தாக்கத்திற்கு உள்ளானாரா என்று பதற்றத்தில் இருந்து, அந்த இடத்தில் கூட்டம் திரண்டது. இதனால் சுரங்கமேற்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவரம் பெறும் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண்ணை பாதுகாப்பாக கீழே இறக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது அந்தப் பெண் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பதைத் தெரிந்து கொள்ள விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Breaking: ஹாப்பி நியூஸ்! 5% ஊதிய உயர்வு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
இதையும் படிங்க: அய்யோ.. பிஞ்சு குழந்தை.. 11 மாத குழந்தையின் சடலத்தை தென்னந்தோப்பில் மர்மமாக புதைத்த பெற்றோர்! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்..