Breaking: ஹாப்பி நியூஸ்! 5% ஊதிய உயர்வு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Breaking: ஹாப்பி நியூஸ்! 5% ஊதிய உயர்வு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என மாநில திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஆலோசகர் அல்லது உதவியாளராக பணியாற்றும் நபர்களுக்கு இவ்விருப்பு பொருந்தாது எனவும், ஊதிய உயர்வுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் அவசியம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக ஊதிய உயர்வு எதிர்நோக்கிய பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நம்பிக்கையும் நிம்மதியையும் அளிக்கும் தீர்மானமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அய்யோ.. பிஞ்சு குழந்தை.. 11 மாத குழந்தையின் சடலத்தை தென்னந்தோப்பில் மர்மமாக புதைத்த பெற்றோர்! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்..
இதையும் படிங்க: பைக்கில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர்! கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி! பதறவைக்கும் சம்பவம்...