அய்யோ.. பிஞ்சு குழந்தை.. 11 மாத குழந்தையின் சடலத்தை தென்னந்தோப்பில் மர்மமாக புதைத்த பெற்றோர்! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்..
அய்யோ.. பிஞ்சு குழந்தை.. 11 மாத குழந்தையின் சடலத்தை தென்னந்தோப்பில் மர்மமாக புதைத்த பெற்றோர்! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே ஒரு 11 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட சோகமாக, குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் தென்னந்தோப்பில் புதைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அதிகரிக்கிறது.
பக்கரிக்கான் மட்டம் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் மற்றும் முத்துலட்சுமி தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது நான்காவது பெண் குழந்தையான கயல்விழி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ஆம் தேதி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, குழந்தையின் உடலை தனது சொந்த நிலத்திலுள்ள தென்னந்தோப்பில் உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கந்திலி வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவிக்கு கிடைத்ததும், அவர் உடனடியாக கந்திலி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி மீட்டனர். உடற்கூறு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: பைக்கில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர்! கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி! பதறவைக்கும் சம்பவம்...
குழந்தை இயற்கையாகவே உயிரிழந்ததா, அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்ததா என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 'நான்கு பெண் குழந்தைகள் என்பதாலா இந்த செயல்த் திட்டம்?' என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், அந்த பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மை நிலை விசாரணை முடிவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேஸ் அடுப்பில் வெந்நீர்! பாத்ரூமில் மகளுடன் அலறிய கர்ப்பிணி பெண்! அடுத்து நடந்த பயங்கரம்! காஞ்சிபுரத்தில் பரபரப்பு...