×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேஸ் அடுப்பில் வெந்நீர்! பாத்ரூமில் மகளுடன் அலறிய கர்ப்பிணி பெண்! அடுத்து நடந்த பயங்கரம்! காஞ்சிபுரத்தில் பரபரப்பு...

கேஸ் அடுப்பில் வெந்நீர்! பாத்ரூமில் மகளுடன் அலறிய கர்ப்பிணி பெண்! அடுத்து நடந்த பயங்கரம்! காஞ்சிபுரத்தில் பரபரப்பு...

Advertisement

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. அங்கு வசித்து வந்த சங்கர்-கோமளா தம்பதியரின் மகள் மணிமேகலை (29), இரண்டாவது கர்ப்பம் காரணமாக தாய்வீட்டில் தங்கி இருந்தார். அவருக்கு ஏற்கனவே கிருபாக்ஷினி என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கேஸ் அடுப்பில் சுடுதண்ணீர் வைத்துவிட்டு தன் மகளை பாத்ரூமில் வைத்து குளிப்பாட்டிக் கொண்டிருந்த  போது, கேஸ் அடுப்பில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி வீட்டை முழுமையாக சூழ்ந்தது. இந்த தீவிபத்தில் மணிமேகலை மற்றும் அவரது மகள் இருவரும் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ளவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், தீவிபத்தில் தீக்காயங்களால் இருவரும் உயிரிழந்தனர். இந்த பரிதாபமான சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இந்தச் செய்தி உள்ளூரிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அம்மாவிடம் கடைசியாக பேசிய பெண்! அடுத்து பெண் செய்த அதிர்ச்சி செயல்! அழுது கதறிய 1 1/2 வயது குழந்தை! பகீர் சம்பவம்...

 

இதையும் படிங்க: வேர்கடலை என நினைத்து சாப்பிட்ட குழந்தைகள்! திடீரென மயங்கி விழுந்து அடுத்து நடந்த அதிர்ச்சி! சிகிச்சைக்கு பின் தெரிய வந்த உண்மை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#காஞ்சிபுரம் fire accident #Pregnant Woman Death #mother daughter death news #தீவிபத்து சம்பவம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story