கல்யாணம் பண்ணிக்கலாம்.. இளைஞரிடம் ஆசையாக பேசி ரூ.14 லட்சம் கறந்த இளம்பெண்.!
Chennai News: திரைப்பட பாணியில் இளைஞரிடம் ரூ.14 லட்சம் பணம் ஏமாற்றப்பட்டது.
திருமணம் செய்வதாக இளைஞரிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நடைப்பயிற்சி:
சென்னையில் உள்ள போரூர், காரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் திருமணம் உட்பட விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு முன்னதாக அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது, திரிபுரா மாநிலத்தில் வசித்து வரும் 32 வயது இளம்பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.. எமனான காதல்..!
பழக்கம்:
இவர்கள் இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், பின் நெருங்கி பழகி இருக்கின்றனர். மேலும், பெண்ணின் அழகில் மயங்கிப்போன இளைஞர், பெண் கேட்கும் பணம் உட்பட அனைத்து உதவியையும் செய்து இருக்கிறார். இதனிடையே, பெண்மணி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது முடிந்ததும் திருமணம் செய்யலாம் என கூறியுள்ளார்.
குடித்தனம்:
இதனால் பெண்ணின் வார்த்தைகளை நம்பிய இளைஞர், இளம்பெண்ணுக்கு கரம்பாக்கத்தில் வீடு எடுத்து கொடுத்து ரகசியமாக குடித்தனமும் நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவரும் அவ்வப்போது உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 17 ம் தேதி தாய்க்கு உடல்நலம் சரியில்லை என பெண் திரிபுராவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நகைகள் திருட்டு:
இதனால் சந்தேகமடைந்த இளைஞர் வீட்டின் பீரோவை சரிபார்த்தபோது 25 சவரன் நகைகள், ரூ. 14 லட்சம் ரொக்கம் மாயமானது தெரியவந்தது. போனில் தொடர்புகொண்டபோதும் பலனில்லை. இதனால் அவரின் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மைத்துனர் மனைவியுடன் உல்லாசம்.. நடுரோட்டில் நடந்த கொடூர கொலை சம்பவம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.!