×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.. எமனான காதல்..! 

Chennai News: காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். 

Advertisement

வாலிபர் கொலை விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஊழியர்: 

சென்னையில் உள்ள கேளம்பாக்கம், தையூர், சின்னம்மா நகரில் வசித்து வருபவர் கருணாகரன். இவரின் மகன் பிரவீன் குமார் (வயது 23). அப்பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கடந்த ஞாயிறன்று இரவு சுமார் 10 மணியளவில் சாலையோரத்தில் நின்றபடி பிரவீன்குமார் போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: மைத்துனர் மனைவியுடன் உல்லாசம்.. நடுரோட்டில் நடந்த கொடூர கொலை சம்பவம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.! 

அரிவாள் வெட்டு: 

அச்சமயம், காரில் வந்த கும்பல் ஒன்று பிரவீனிடம் முகவரி விசாரிப்பதுபோல நடித்து, இறுதியில் அவரை சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் தலை, கைகள், முதுகு பகுதியில் படுகாயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் வந்ததும் கும்பல் தப்பியோடியது. 

விசாரணை: 

பின் இதுகுறித்த தகவலின்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தையூர் கிராமத்தில் வசித்து வரும் ஏழுமலையான் மகளை, பிரவீன் குமார் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. காதல் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரவீன் குமாரை தாக்கியது தெரியவந்தது. 

மரணம்: 

குற்றவாளிகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்த அதே நேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரவீன்குமார் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஏழுமலை (வயது 48), மணிகண்டன் (வயது 31), நந்தீசு (வயது 19) ஆகியோரை கைது செய்தனர்.  

இதையும் படிங்க: புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த இளைஞர் கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Crime news #Love #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story