×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த இளைஞர் கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்.! 

Chennai News: மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். 

Advertisement

நலவாழ்வை பெறுவார் என போதை மறுவாழ்வு மையத்துக்கு வந்த இளைஞர் மரணித்த சோகம் நடந்துள்ளது. 

மறுவாழ்வு மையம்: 

சென்னையில் உள்ள தாம்பரம், சேலையூர் பகுதியில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், போதையில் இருந்து மீள கடந்த ஆண்டில் சேர்ந்துள்ளார்.  

இதையும் படிங்க: 7 பேரால் 13 வயது சிறுமி பலாத்காரம்.. சகோதரர், காதலன் என பீர் குடிக்கவைத்து நேர்ந்த கொடுமை.. சேலத்தில் பேரதிர்ச்சி.! 

மரணம்: 

அவர் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்த 4 நாட்களிலேயே மரணித்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து சேலையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணித்தது தெரியவந்தது. 

அந்த 5 பேர்: 

மேலும், வாயில் துணி வைத்து அகைக்கப்பட்டு, கைகள் துணியால் கட்டப்பட்டு இருந்ததால் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதாவது, போதை மறுவாழ்வு மையத்தில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வந்த மணிகண்டன், ஏழுமலை, குணசீலன், ராஜ சுதாகர், ராஜ்கமல் ஆகியோர் அருண் குமார் தப்பிச்செல்ல முயன்றதால் கை-கால்களை கட்டிப்போட்டு இருக்கின்றனர். இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார் என கூறி இருக்கின்றனர்.  

இந்த உண்மை தற்போது அம்பலமான நிலையில், இவர்கள் ஐவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: குடும்ப பெண்கள், மாணவிகள் டார்கெட்.. மோசடி பணத்தில் கோடீஸ்வரன்.. யார் இந்த கேடி? 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #chennai #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story