×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மைத்துனர் மனைவியுடன் உல்லாசம்.. நடுரோட்டில் நடந்த கொடூர கொலை சம்பவம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.! 

Chennai News: கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்டார். 

Advertisement

உறவினர் மனைவியுடன் கள்ளக்காதல் வயப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டார். 

தம்பதி: 

சென்னையில் உள்ள செங்குன்றம், ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர், 12 வது தெருவில் வசித்து வருபவர் ரத்தினவேல் பாண்டியன் (வயது 40). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி மனைவி, 2 மகன்கள் இருக்கின்றனர். இருவரும் ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். 

இதையும் படிங்க: புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த இளைஞர் கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்.! 

தனியாக.. 

தற்போது மனைவி, மகன்கள் தனியாக இருக்கும் நிலையில், பாலமுருகன் தனியாக வசித்து வருகிறார். ரத்தினவேலின் மைத்துனர் சரவணன் (வயது 39). சரவணனின் மனைவிக்கும் - ரத்தினவேலுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியதாக தெரியவருகிறது. இதனால் இருவரும் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

கண்டிப்பு: 

இந்த தகவலை அறிந்த சரவணன் பலமுறை ரத்தினவேலை கண்டித்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், ரத்தினவேலை போட்டுத்தள்ள திட்டமிட்டு இருக்கிறார். நேற்று காலை 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த ரத்தினவேலை, சரவணன் மற்றும் அவரின் சகோதரர் தனசேகர் (வயது 34) பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இவர்களுடன் உறவினர் பழனிச்சாமி (வயது 45) என்பவரும் வந்துள்ளார். 

கொலை: 

இவர்கள் மூவரும் சேர்ந்து ரத்தினவேலை இடைமறித்து சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். இந்த சுமப்பவதில் படுகாயமடைந்த ரத்தினவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்துக்குப்பின் குற்றவாளிகள் தப்பிவிடவே, தகவல் அறிந்த அதிகாரிகள் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கைது: 

பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சரவணன், தனசேகர், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. கைதுக்குப்பின் இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: 12 பேர் சேர்ந்து மாணவரை அடித்தே கொலை செய்த பயங்கரம்.. சென்னையில் நடந்த திடுக்கிடவைக்கும் சம்பவம்.. பரபரப்பு தகவல்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #illegal affair #Murder #மனைவி உல்லாசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story